மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவிற்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

MK Sivajilingam Released on Bail 2
MK Sivajilingam Released on Bail 2

மாவீரர் தின நிகழ்வுகளுக்குக் கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவிற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நகர்த்தல் பத்திரம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

கடந்த 19ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடைவிதித்த கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் 51 பேருக்கான தடையுத்தரவையும் பிறப்பித்திருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில், உடுதுறை ஆகிய பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.