வவுனியாவில் நா.உறுப்பினர் திலீபனின் குழுவினரின் தாக்குதல்: காமயடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

FB IMG 1648609474022
FB IMG 1648609474022

வவுனியா இளைஞன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FB IMG 1648609471270

அண்மைக்காலமாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களை தனது முகநூல் வாயிலாக விமர்சித்தும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர் சிலர் தொடர்பில் புகைப்படங்களை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்து வந்த இளைஞன் மீது சிலர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர் . 

இத் தாக்குதலில் தலை, முகம், கை, கால் பகுதிகளில் பலமாக தாக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் மீது நேற்றுமுன்தினம் நொச்சிமோட்டைப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாக்குதலில் காயமடைந்த இளைஞனின் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது .
இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

FB IMG 1648609468869

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் சிலர் நொச்சிமோட்டை பகுதியில் வைத்து தாக்கினர். பின்னர் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தயா என்பவரின் வீட்டிற்கு அருகில் வைத்தும் தாக்கினர்.
பின்னர் எனது தொலைபேசி, பணப்பை என்பனவற்றையும் தாக்கியவர்கள் எடுத்துவிட்டு நான் இறந்துவிட்டதாக நினைத்து மகாறம்பைக்குளம் காவற்துறையினக்கு முன் என்னை போட்டுட்டு சென்றனர். இதற்கு முதல் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் எனவும் தெரிவித்துள்ளார் என தாக்குதலில் காயமடைந்த இளைஞனின் காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனை ஆவணப்படுத்தி சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியவர் ஈ.பி.டி.பி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .