தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையில் நேற்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

tamil leaders meet e1669387586515
tamil leaders meet e1669387586515

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதிகாரப்பரவலை வழங்க வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்துவது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.