புதிய கூட்டணிகளால் குட்டி தேர்தலில் சவால்:ஏற்றுக்கொள்கிறார் பசில்!

pasil
pasil

” புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளமை தேர்தலில் சவாலாக அமையும். எனினும், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை எமது கட்சிக்கு உள்ளது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கண்டி, தலதாமாளிகைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட பஸில் ராஜபக்ச, வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் நோக்கிலேயே வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகையில் அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகின்றது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச,

” 252 சபைகளுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது. யாழில் வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மட்டக்களப்பில் கப்பல் சின்னம். அதேபோல குதிரையும் களமிறங்குகின்றோம்.

தேர்தல் முடிவு எவ்வாறு அமையுமென கூறமுடியாது. அது மக்களின் கையில்தான் உள்ளது. ” – என்றார்.