ஆழ்ந்து சிந்தியுங்கள் புலம் பெயர் உறவுகளே – அன்ரனி அன்ரன்

 தம்பதி
தம்பதி

கொரோனா Covid-19 காரணமாக Brampton ,ON, Canada தமிழ்த் தம்பதியினர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள், .மனைவி ஏற்கனவே இறந்த நிலையில்,இப்போது கணவரும் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். பிள்ளைகள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எனது வீட்டிலிருந்து ஐந்து நிமிட கார் ஓட்டத்தில் இவர்களின் வீடு இருப்பதாக அறிகிறேன் . கணவன் பத்திரிகை விநியோகத்துக்காக வெளியில் அருகில் இருக்கின்ற நகர்களுக்கு சென்று வந்த நிலையிலேயே அவருக்கு தொற்று ஏற்றப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது .

புலம் பெயர் தேசங்களில் எம்மவரின் இழப்புக்கள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது . விழிப்புணர்வு சார்ந்த விடையங்களை இயன்றளவு ஊடகங்கள் ஊடாகவும் ,தனிப்பட்ட முறையிலும் எல்லோருமே பகிர்ந்து கொள்கிறோம், மற்றவருக்கும் சொல்லிக்கொடுக்கிறோம் ஆனால் இழப்புக்கள் தவிர்க்க முடியாமல் உள்ளது .

ஆழ்ந்து சிந்தியுங்கள் புலம் பெயர் உறவுகளே

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்”

Antony Anton (முகநூல் பதிவு)