சித்தார்த்தனை விமர்சிக்கும் அனந்திக்கு – ஒரு நினைவூட்டல்!!

punnalaikattuvaan 9
punnalaikattuvaan 9

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் அவர்கள் நேற்றைய ஊடக சந்திப்பில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கதைப்பதற்கு சித்தார்த்தனுக்கு அருகதை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் தொடர்பாகவும் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு சர்ச்சைக்குரிய கருத்துக்கைளத் தெரிவித்திருந்தார். சுமந்திரனின் அக்கருத்துக்கு கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தன.

அந்த வகையில் சுமந்திரனின் இக்கருத்துக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அனந்தி சசிதரன் சுமந்திரன் விடயத்தில் ‘கள்ள மௌனம்’ சாதித்துவிட்டு, இன்று சுமந்திரனை விமர்சித்த சித்தார்த்தனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களேயானால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று விடுவார்கள் என்றும், எனவே அவர்களை அழிக்க வேண்டும் என கூறியவர்தான் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவருக்கு விடுதலைப் புலிகளைப்பற்றிக் கதைக்க அருகதையில்லை” என்று குறிப்பிட்ட அனந்தி அவர்களிடம் தமிழ்க் குரல் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறது.

13-08-2015 அன்று யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் மண்டபத்தில் ‘இழந்த உரிமைகளை மீட்டெடுக்க எங்கள் வாக்கு அண்ணன் சித்தார்த்தனுக்கே’ என எழுதப்பட்ட பதாகைக்கு கீழ் சித்தார்த்தனுக்கு அருகில் இருந்து சித்தார்த்தனுக்கு வாக்கு கேட்டது எந்த முகத்துடன் என்பதை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த முடியுமா?

அன்று சித்தார்த்தனுக்கு வாக்குக் கேட்ட நீங்கள் இன்று சித்தார்த்தனை விமர்சிப்பது எதற்காக?

புலிகள்மீதும் விடுதலைப் போராட்டம்மீதும் உண்மையான பற்று இருந்திருந்தால்,

அன்று

சித்தார்த்தனின் தேர்தல் பிரச்சார மேடையில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கமாட்டீர்கள்.

இன்று

சுமந்திரனின் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றி இருப்பீர்கள்.

சுமந்திரனை விமர்சித்தார் என்பதற்காக சித்தார்த்தனை விமர்சிப்பதன் சூட்சுமம் என்ன?