பாமரரை ஏமாற்றிய சட்டத்தரணி – நடந்தது என்ன?

.jpg
.jpg

மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் 50,000 சொந்த சாரீரப்பிணையில் விடுவிக்கப்பட்ட வியாபாரி ஒருவரிடம் நீதிமன்றத்திற்கு கட்டவேண்டும் என்று சொல்லி ஏமாற்றிப் பணம்பெற்ற சட்டத்தரணி தொடர்பான விவாதங்கள் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளன்.

அந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விளக்கம் ஒன்றை சிவரதன் வயிரவநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அப்பதிவு இங்கே வாசகர்களின் பார்வைக்காக:

கடந்த இரண்டு கிழமைக்கு முன்னர் நடந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக என்னால் முடிந்த அளவுக்கு விசாரித்த வகையில் அதை இங்கே விவரமாக தருகிறேன்

நான் இங்கே விளக்கும் விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் எவை என்று என்னிடம் கேட்டால் அதற்கு என்னுடைய விடை எனது வார்த்தைகள் மட்டுமே . அதை நம்புபவர்கள் நம்பலாம் . நம்பாமல் விடுபவர்கள் நம்பாமல் விடலாம்

இதுவரை நான் எழுதிய பல பதிவுகள் குறிப்பிட்ட தரப்பில் இருந்து கிடைத்த தகவல் அடிப்படையிலேயே எழுதினேன் . அதே மாதிரியே இதையும் எழுதுகிறேன்

இந்த விடயங்கள் யாவும் எந்தவித கற்பனைகளும் கலக்காதவை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்

குறிப்பிட்ட பாமரர் ஒருவர் தனது வியாபார ( சேவிஸ் ஸ்டேஷன் ) வளவில் டெங்கு நோய் பரவ கூடிய ஏதுகளை வைத்திருந்தார் என்ற குற்ற சாட்டில் மல்லாகம் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் . அதாவது தற்போது நிலவும் கொரனா நோய் காரணமாக சில வழக்குக்களை வாட்ஸ் அப் மூலம் முன்னிலைப்படுத்துவார்கள் . அதே மாதிரி தான் இந்த வழக்கும் முன்னிலைப்படுத்தப்பட்டது

இந்த வகையான வழக்குக்கு உடனடியாகவே தண்டப்பணம் அறைவிட முடியுமாயினும் , குறிப்பிட்ட நபர் மாஸ்க் அணிந்திருந்தமை நீதிபதியால் அவரை சரியாக அடையாளம் காண முடியல மற்றும் விடுமுறை நாள் என்பதால் , அடுத்த திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்து சொந்த சாரீர பிணை ரூபா 50 000 இல் விடுவிக்க அனுமதித்தார் . இவாறான வழக்குக்கு தண்ட பணம் ஆக கூடியது ரூபா 2000

இவ்வாறான பிணை க்கு நீதி மன்றில் அந்த தொகை கட்டுவதில்லை . குறிப்பிட்ட நபர் கையெழுத்து வைத்தால் போதும் .

இது நடந்து முடிந்தவுடன் குறித்த நபருக்காக வாதாடிய வக்கீல் குறித்த நபரை தொடர்பு கொண்டு தான் நீதிபதி அய்யாவோட கதைச்சு பிணை எடுத்துட்டேன் என்றும் அதற்கு நீதி மன்றுக்கு 50 000 ரூபா கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி காசை வாங்கி இருக்கிறார் .

இது நடந்து ஒரு கிழமையின் பின் அதாவது கடந்த கிழமை குறிப்பிட்ட நபர் மல்லாகம் நீதிபதி அய்யாவின் வீட்டுக்கு போயிருக்கிறார் . குறித்த நபர் நீதிபதி அய்யாவின் வீட்டில் முன்னர் வேலை செய்தவர் . அவ்வாறான பழக்கத்தினால் போன போது நீதிபதி ஐயாவுக்கு தனக்கு இப்படியொரு வழக்கு வந்தது என்றும் அதற்கு பிணையாக 50 000 ரூபா கட்டினேன் என்றும் கூறி அது உங்கள் முன்னிலையில் தான் நடந்தது ஐயா . இனிமேல் இப்படியான பிழைகள் விடமாட்டேன் ஐயா என்றும் சாதாரணமாக சொல்லி இருக்கிறார்

அதற்கு நீதிபதி ஐயா திகைத்து போய் பிணையாக காசு கட்டினீரா ?? யார் உம்முடைய வக்கீல் என்றும் கேட்டிருக்கிறார்

அவர் வக்கீலின் பெயர் சொல்லி காசு கொடுத்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்

அடுத்த இரண்டு நாளில் கூடிய நீதி மன்றில் , வக்கீல்களுக்கான கூட்டம் ஒன்றை வைத்த நீதிபதி ஐயா குறிப்பிட்ட விடயத்தை , வக்கீலின் பெயர் இல்லாமலே கூறி இப்படி செய்வது குற்றமானது . நான் குறித்த வக்கீலுக்கு எதிராக முறைப்பாடு செய்து , அவரது உரிமத்தை ரத்து செய்வேன் என்றும் கூறி இருக்கிறார்

வக்கீல்கள் எல்லோரும் அமைதியாக இருக்க குறித்த வக்கீல் மட்டும் எழுந்து ஓம் ஐயா இதற்க்கு நடவடிக்கை எடுக்க தான் வேண்டும் என்று கூறி இருக்கிறார் . அதற்கு வக்கீல் ஐயா நான் குறித்த பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சத்திய கடதாசி வாங்கி வைத்திருக்கிறேன் .அதை வைத்து நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் .

இவ்வாறான பிரச்சனைகள் வரும்போது பாதிக்கப்பட்டோர் சார்பாக குரல் கொடுக்கும் வக்கீல் பார்த்திபன் இந்த விடயம் தொடர்பாக மௌனம் சாத்தித்தை கண்டு ஆச்சரியப்பட்ட நீதிபதி ஐயா ” என்ன பார்த்திபன் நீர் வழமையாக கதைப்பீர் ? இன்று மௌனமாக இருக்கிறீர்” என்று கேட்டுள்ளார்

அதற்கு பார்த்திபன் ஓம் ஐயா .. இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி இழுத்துள்ளார் .

இது தான் நடந்தது .

இதை நீதிபதி ஐயா பலருக்கு கூறியுள்ளார் . இப்படியும் வக்கீல்கள் இருப்பது தமிழ் இனத்துக்கே அவமானம் என்று கூறியிருக்கிறார்

ஏற்கனவே குறித்த வக்கீல் தான் வெளிநாடு ஒன்றில் நின்ற போது , உள்ளூரில் நடந்த வழக்கு ஒன்றிற்கு தனது கையெழுத்து போட்டு தாக்கல் செய்தது தொடர்பாக விசனத்தில் இருந்த நீதிபதி ஐயா இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்

அதில் ஒருவரான யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இது குறித்து விழிப்படைந்து தனது பிணை தொடர்பான கட்டளைகள் வாசிக்கும் போது தீர்ப்பை வாசிக்கும் முதலியார கொண்டு #சாரீரபிணைகட்ட_தேவையில்ல என்கிற விடயத்தையும் சொல்லிவிக்க பண்ணுகிறார் .தொடர்ச்சியாக வழக்குக்களுக்கு போகும் ஊடகவியலாளர்கள் இந்த வித்தியாசத்தை கடந்த ஒரு கிழமையாக உயர் நீதிமன்றில்அவதானிக்கலாம் .

இதுவே நடந்தது . அத்தனையும் உண்மை . இப்ப கூட யார் வக்கீல் என்று என்னால் சொல்ல முடியும் . ஆயினும் இது தொடர்பான நீதியான விசாரணை ஓன்று நடக்கும் என்ற நம்பிக்கையில் அதை இங்கே சொல்லாமல் தவிர்க்கிறேன்

மதிப்புக்குரிய #நீதிபதிஉயர்திருஆனந்தராஜா அவர்களே !!
கொரானா தாக்கத்தால் ஆளான மக்களிடமிருந்து பிழையான வழியில் வழிப்பறி கொள்ளை போன்ற செயலை செய்த அந்த வக்கீல் மேல் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

நீதி மன்றம் போனால் சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் அந்த பாமர மக்களின் சார்பாக , இதற்க்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் கேட்டு கொள்கிறேன்

மல்லாகம்சட்டத்தரணிகள்சங்கத்தினரே ! உங்கள் ஒட்டுமொத்த பேரின் மேலும் விழுந்திருக்கிற இந்த களங்கத்தை போக்க உடனடியாக ஒரு விசாரணை ஒன்றை மேற்கொள்ளுங்கள் . மக்களுக்கு இது தொடர்பான விளக்கத்தை கொடுங்கள்

விஷயங்கள் தெளிவாக தெரிந்தும் , அது தொடர்பாக குரல் கொடுக்க தயங்கி கொண்டிருக்கும் குமாரவடிவேல் குருபரன் போன்ற , வளர்ந்துவரும் அடுத்த தலைமுறை வழிகாட்டிகளே நீங்கள் பாதிக்கப்பட்ட பாமரனுக்காக உங்கள் குரலை கொடுக்காட்டியும் பரவாயில்லை . இனிமேல் வேறொருவர் பாதிக்கப்பட கூடாது எனதற்காகாவாது குரல் கொடுங்கள்

உங்கள் மேல் நம்பிக்கையடன் இந்த விடயம் தொடர்பான மேலதிக கருத்துக்களை நிறுத்துகிறேன் அல்லது குறைக்கிறேன்

நன்றி
வ சிவரதன்
லண்டன்