மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு திறந்த மடல்!

images 2
images 2

மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் சரீரப் பிணைக்கு 50,000 கட்ட வேண்டும் என்று வாடிக்கையாளரை சட்டத்தரணி ஒருவர் ஏமாற்றியமை தொடர்பான சர்ச்சைகள் வெளிவந்திருந்தன.

இந்தச் சர்ச்சையின் தொடர்ச்சியாக இந்தச் சர்ச்சைக்கும் சட்டத்தரணி சுகாசுக்கும் தொடர்பில்லை என்று மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கை தொடர்பாக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு திறந்த மடல் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் வருமாறு:

தலைவர் ,
சட்டத்தரணிகள் சங்கம்
மல்லாகம்
01/06/2020

வணக்கம் ஐயா ,

உடுவில் கிழக்கு , சுன்னாகம் எனும் முகவரியில் வசித்து வந்த வயிரவநாதன் சிவரதன் ஆகிய நான் , தற்பொழுது லண்டனில் வசித்து வருகிறேன் . சமூக வலை தளத்தில் வந்த செய்தி ஒன்றினை சுட்டிக்காட்டி தாங்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காவும் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்

சமூக வலைதளத்தில் சட்டத்தரணி சுகாஷ் பெயர் குறிப்பிட்டு எழுதும் விடயம் தொடர்பாக தாங்கள் வெளியிட்ட (30 /05 /2020 திகதியிடப்பட்ட )மறுப்பறிக்கை பார்த்தேன் . அந்த விடயம் தொடர்பாக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பேசி வருபவன் என்ற வகையில் சில விடயங்களை இங்கே கூற விரும்புகிறேன்

சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணி சுகாஷ் பெயர் குறிப்பிட்டு எழுதியவர்கள் ஒருவர் அல்லது ஒரு சிலர் மட்டுமே .பெயர் குறிப்பிடாமல் “ஏமாற்றி காசு பறித்த ” விடயம் பற்றி எழுதியவர்களே அதிகம் . நான் கூட பெயர் குறிப்பிடாமல் தான் எழுதி இருந்தேன் .

ஆனால் பெயர் குறிப்பிட்டு சமூக வலை தளத்தில் எழுதுவது பிழையானது என்றும் அவ்வாறான விடயம் தொடர்பான எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் மறுத்த நீங்கள் அந்த “சமபவம் நடக்கவே இல்லை “என்று மறுக்கவில்லை .

மேலும் நீதிபதி உயர்திரு ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் – அவரே இது தெடர்பாக வக்கீல்களிடையே பேசி இருந்தார் ” என்றும் நான் சமூக வலை தளத்தில் பகிர்ந்து இருந்தேன் . அவரே பலரிடம் இது பற்றி குறிப்பிட்டு சொல்லி இருந்தார் என்றும் பகிர்ந்து இருந்தேன்

இந்த விடயங்களை கூட நீங்க மறுக்கல . தனியே ஒரு வக்கீல் பெயர் குறிப்பிட்டது பற்றி மட்டும் மறுத்து இப்போ நீதிபதி பொய் சொன்னாரா என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி உள்ளீர்கள் .

அது மட்டுமல்ல ஒருவரின் பெயர் குறிப்பிட்டதை மட்டும் மறுத்ததன் மூலம் , அந்த சம்பவம் தொடர்பாக மிகுதி எல்லா சட்டத்தரணிகளையும் ( நீங்கள் உட்பட ) சந்தேகப்படும்படியான சூழ்நிலைக்குள் எங்களை தள்ளியுள்ளீர்கள்

எனவே இந்த சம்பவம் நடந்ததா ? இவ்வாறு நடந்தது தொடர்பாக நீதிபதி ஐயா தங்கள் வக்கீல்களுக்கு அறிவித்தாரா ? ஆகிய விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிடும்படி கேட்டுகொள்கிறேன் .

அல்லது மேற்படி சம்பவம் நடந்தது உண்மை என்றால் , பாதிக்கப்பட்டவர் சார்பான முறைப்பாடாக எனது இந்த கடித்தை ஏற்று விசாரணை செய்து அது தொடர்பான உண்மை தன்மையை மக்களுக்கு அறிவிக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்

நீங்கள் வெளியிட்ட அறிக்கையின் கடித உறையில் உள்ள சட்டத்தரணிகளில் நீங்கள் மற்றும் குறிப்பிட்ட சட்டத்தரணி தவிர்ந்த மிகுதி ஆட்களில் 90 வீதமான ஆட்கள் குறிப்பிட்ட வக்கீலின் யூனியர் வக்கீல்கள் ஆகும்

எனவே இது தொடர்பான விசாரணை நீதியாக நடக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தாலும் , தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக , மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவும் இதை நீங்களே விசாரித்து உடனடியாக விசாரித்து உண்மையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

வ சிவரதன்
லண்டன்

Copy
1 சட்டத்தரணிகள் சங்கம் – யாழ்ப்பாணம்
2 நீதிபதி உயர்திரு ஏ.ஏ. ஆனந்தராஜா
3 ஊடகங்கள்