யார் பருந்து? ஊர்க்குருவிகளுக்குள் சண்டை!

piraba
piraba

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ் அரசியல் சூழலில் நகைச்சுவையான பல விடயங்கள் நடந்தேறுகின்றன. 

இந்த நிலையில் தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசுவதையும் அவர்களைப் போல பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதையும் கடந்த தேர்தல் காலத்தில் கண்டுள்ளோம். 

அண்மைய நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்களுக்கு இடையில் யார் பருந்து என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரிகை வாசிக்கும் புகைப்படம் ஒன்றைப் போல இரண்டு வேட்பாளர்களும் புகைப்படத்தை எடுத்துள்ளதுடன் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் மோதி வருகின்றனர். 

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழியைப் பயன்படுத்தி ஒரு தரப்பை இன்னொரு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர். 

எனினும் இரண்டு தரப்பினரும் பருந்தல்ல, ஊர்க்குருவிகள்தான் என்பதை புரியவில்லையா என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் தேர்தல் காலத்தில் இத்தகைய உபாயங்களை பயன்படுத்தி விட்டு பின்னர், விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக செயற்படுவதிலும் பேசுவதிலும் இவ் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சளைத்தவரல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.