தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும்! குணசீலன்

kunaseelan
kunaseelan

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்    எனவும் முன்னாள் வடமாகாண அமைச்சரும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன் கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.தற்போதைய சூழ் நிலையில் நம் சமூகத்துக்கு ஒவ்வாத விடயம் வரும் போது அவற்றை ஒதுக்கி வைக்கின்றோம்.அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோம்.

உண்மையிலேயே இப்போதும் அதே நிலமை தான். உதாரணமாக ‘கொரொனா’ வந்து விட்டது. எவ்வளவு முற்பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்கின்றோம்.

இப்போது புதிதாக ஒரு ‘கொரோனா’ வந்துள்ளது. வீட்டுக்குள் கொரோனா வந்துள்ளது . வீட்டை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வந்துள்ளது. ஆகவே நாம் இந்த முறை அவர்களை தனிமைபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. இம்முறை கூட்டமைப்பு வீட்டுடன் தனிமைப்படுத்தப்படவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

 எங்களுடைய மக்கள் அதற்குறிய முடிவை இம்முறை கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதை விட மக்களுக்கு இரண்டு முறையில் சேவை ஆற்றலாம்.

ஒன்று தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவோ,மாகாண சபை உறுப்பினர்களாகவோ அல்லது பதவிகளுக்கு வந்து மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்.

இன்னொருவகை இருக்கின்றது. எங்களுடைய மக்களை தீமைகளில் இருந்து சதித்திட்டங்களில் இருந்து அல்லது பிழையான வழி நடத்தல்களில் இருந்து அல்லது உள்னோக்கம் சுயநலம் கொண்ட மனிதர்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதன் மூலம் சேவை ஆற்றலாம்.

ஆகவே நாங்கள் வெற்றி பெறுகின்றோமோ இல்லையோ என்பதற்கு அப்பால் பொருத்தமற்றவர்கள் வினைத்திறன்  அற்றவர்கள் துரோகிகள் சுய நலவாதிகளை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது” என தெரிவித்தார்.4Shares