வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமாகிய க.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுதிமொழி அளித்த விக்னேஸ்வரன், தனது முதல் உரையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர்வினை இருக்கும் என்றும் அவர் கூறி, இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதன்படி விக்னேஸ்வரனின் கருத்தானது இலங்கையின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று குற்றஞ்சாட்டியே இந்த கோரிக்கையினை அவர் சபாநாயகரிடத்தில் முன் வைத்துள்ளார்.