புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்தவும், பிரபாகரனை சந்திக்கவும் மகிந்த விரும்பினார்- எரிக் சொல்ஹெய்ம்

images
images

விடுதலைப் புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார்.அத்துடன் தலைவர் பிரபாரகனை சந்திக்கவும் விருப்பம் கொண்டிருந்தார் என நோர்வேயின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கும் அவர் விருப்பம் கொண்டிருப்பதை என்னிடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செலுத்துவதற்கு அனுமதிக்க தான் தயார் எனவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

இறுதி யுத்தத்தின்போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது.அனைத்து பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பதிவு செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.அந்த பெயர்களை கொண்டவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை விடுத்தோம் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.