விக்கியின் நாடாளுமன்ற உரைகள் மீண்டும் தமிழினத்தை படுகுழியில் தள்ளும் – முன்னணி எச்சரிக்கை

tnpfj
tnpfj

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகள் தமிழினத்தை மீண்டும் படுகுழியில் தள்ளும் செயற்பாடாகத் தோன்றுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் அவர்கள் தனது முகநூல் பதிவிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ஏதோ தான் ஒரு நீண்டகால தமிழ்த்தேசிய அரசியல் போராட்டவாதிபோலும். இல்லையேல் விடுதலைப்போரில்போராட்டம் நடத்திய போராளிபோலும் தன்னை புதிதாகப் பூதாகரப்படுத்தி தனது வாழ்வியலில் சம்பந்தப்படாத புலி போராட்டம் முள்ளி வாய்க்கால் தமிழர் தேசம் என்றெல்லாம் பாராளுமன்றத்துள் பந்தாகாட்டி மீண்டும் தமிழினத்தை படுகுழியுள் தள்ள ஏதோ பூடகமாய் மொழிவதாகத்தோன்றுகிறது அவரது புதிய அரசியல் நாடக அத்தியாயம்.” என விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பாக விசனம் வெளியிட்டுள்ளார் வாசுகி சுதாகர்.

வாசுகி சுதாகரின் குறித்த கருத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், ஈழத்தின் பிரபல இயக்குனர் கேசவராஜன் ஆகியோர் உட்பட பலர் தங்கள் கண்டனங்களை பதிவுசெய்துள்ளனர்.