மணிவண்ணன் தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் பேரவை!

tnyf3
tnyf3

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்யவேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த அவ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை அமைப்பைவிட்டு நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாக செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இவ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

tnyf