இருபதாவது சீர்திருத்தச்சட்டத்தை எதிர்க்க வேண்டும்-செ.கஜேந்திரன்

IMG 20200907 210446
IMG 20200907 210446

இருபதாவது சீர்திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்கு நன்மை தராது, ஆபத்தானது இதனை எதிர்க்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


இன்று வவுனியாவில் ‌ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
19சீர்திருத்த சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே சீர்திருத்த சட்டத்தினை முழுமையாக நீக்கி இருபதாவது சீர்திருத்த சட்டத்தினை கொண்டுவருவதன் மூலம் மீண்டும் ஐனாதிபதிக்கு அதிகாரத்தினை குவிக்கின்ற ஒரு முயற்சி நடைபெறுகின்றது.

இருபதாவது சீர்திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்கு நன்மை தராது – செ.கஜேந்திரன்

இருபதாவது சீர்திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்கு நன்மை தராது – செ.கஜேந்திரன்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Montag, 7. September 2020


மகிந்த ராஜபக்ஷ மற்றும் சகோதரர்கள் இந்த போர் வெற்றியினை பயன்படுத்தி தமக்கு கிடைத்த ஆதரவினை பயன்படுத்தி தாம் நீண்ட காலத்திற்கு ஆட்சிசெய்வதற்கு இந்த சீர்திருத்த சட்டத்தினை கொண்டுவருகிறார்கள். இந்த செயற்பாடு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான செயற்பாடு. இதனால் இச் சீர்திருத்த சட்டத்தினை முழுமையாக எதிர்க்க வேண்டிய நிலை இருக்கின்றது.

பாராளுமன்றத்திற்கு அதிகாரமாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியிற்கு அதிகாரமாக இருந்தாலும் சரி எல்லோரும் தமிழர்களுக்கு எதிரான விடயத்தையே கடைபிடித்து வருகின்றார்கள்.  கடந்த 70வருட காலம் சான்றாக இருக்கின்றது. ஆகவே இந்த இருபதாவது சீர்திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்கு நன்மை தராது. ஆனால் பொதுவான ஜனநாயகம் என்னும்போது இருபதாவது சீர்திருத்தச்சட்டம் ஆபத்தானது ஆகவே இதனை எதிர்க்க வேண்டும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.