முன்னணியின் தலைமை என்பது என்னையும் உள்ளடக்கியதே – மணி அதிரடி

.jpg
.jpg

‘தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை என்பது என்னையும் உள்ளடக்கியதே எனக்கு எதிராக நான் எப்படி செயற்பட்டிருப்பேன்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் அவர்கள் தலைமைத்துவத்தின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டதாலேயே அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இரண்டு நாட்களுக்கு முன்பு அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

கஜேந்திரகுமாரின் இக்கருத்துத் தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று ஒரு சட்டபூர்வமான மத்திய குழு இல்லை என்றும் தானே தொடர்ந்தும் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

‘சுமந்திரனைவிட மோசமானவர் மணிவண்ணன்’ என கஜேந்திரகுமார் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாக நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, தான் சுமந்திரனாக இருந்தால் தன்னை வேட்பாளராக வேட்புமனுவில் கையெழுத்திட கஜேந்திரகுமார் அனுமதித்திருக்கமாட்டார் எனப் பதிலளித்தார்.