சித்தார்த்தன் கலந்து கொள்ளும் வரை சுமந்திரனே ஊடகப்பேச்சாளர்

.ஏ
.ஏ

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் விவகாரத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்மானிப்பதென முடிவாகியுள்ள நிலையில் 22ஆம் திகதி வரை எம்.ஏ.சுமந்திரனே ஊடகப் பேச்சாளராக தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது .

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை கூடியிருந்தது . கூட்டத்தில் பங்காளிக்கட்சி தலைவரான த.சித்தார்த்தன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால், பேச்சாளர் விவகாரத்தை இன்றும் தீர்மானிக்கவில்லை. நாளை மீண்டும் கூடி பேச்சாளரை தீர்மானிக்கலாமா என ஆலோசித்த போது, நாளையும் சித்தார்த்தன் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், அடுத்த அமர்வு 22 ம் திகதி கூட்டப்படும் போது பேச்சாளரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .