மந்துவில் படுகொலையின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கும் பொலிசார் !

ttttt
ttttt

மந்துவில் சந்தை வளாகத்தில் இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 22அப்பாவி பொது மக்களுடைய நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்களுடைய 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற்கொள்ளப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் தடைவிதித்துள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்கள்.

தாயக உறவுகள் நினைவேந்தால் அமைப்பினால் மந்தவில் சந்திப்பகுதியில் எதிர்வரும் 15.09.2020 அன்று சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினை சேர்ந்தவர்களுக்கு புதுக்குடியிருப்பு பொலீசார் நிகழ்வு செய்வதற்கு தடை செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

பொலீசாரின் தடையினையும் மீறி மந்துவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த உள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் கடந்த 15.09.1999 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .