மனம்மாறிய டெனீஸ்வரன் – முடிவுக்கு வந்தது விக்னேஸ்வரன் மீதான வழக்கு

wig den
wig den

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்காக டெனீஸ்வரன் தரப்பில் நேற்று முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டை வாபஸ் பெறுதாக டெனீஸ்வரன் தரப்பு இன்று விசாரணை ஆரம்பமான போது நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது.

wigneshwaran

உச்ச நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மீது தொடுத்திருந்த வழக்கை விக்னேஸ்வரன் வாபஸ் பெற்றால் போதுமானது என டெனீஸ்வரன் தரப்பு தெரிவித்ததை விக்னேஸ்வரன் தரப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த வழக்கு சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து நீதியரசர்கள் இருவரும் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.