முழு நாட்டையும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது – அஜித் ரோஹன

நாட்டின் தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமைபோல் இயக்க முடியும் எனவும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகள் கடமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் வெப்பத்தை கண்காணிக்கவேண்டும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.