விடுதலைப் புலிகள் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்- இலங்கை வெளிவிவகார அமைச்சு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 3

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு

நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில் இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு நேற்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “வன்முறைகளைத் தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்துவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போதும் காணப்படுகின்றன.

அந்த அமைப்பின் செயற்பாடுகளால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமன்றி பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

இதேவேளை, தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையகத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனுதாரர் இல்லையென்றபோதும்,

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உரிய தகவல்களை பிரித்தானிய அரசாங்கத்துக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி வந்துள்ளோம்.

மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால்,

அப்போது மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.