நாட்டில் பதிநான்காயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளகளின் எண்ணிக்கை !

113371155 gettyimages 1204384880
113371155 gettyimages 1204384880

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14000த்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இதுவரையான நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள 172பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கண்டறியப்பட்ட அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்து பத்தாயிரத்து 616ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14 ஆயிரத்து 101ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 595 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை எட்டாயிரத்து 880 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 186 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 35 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது