மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபையை உருவாக்க முயற்சி!

Mavai Senathirajah
Mavai Senathirajah

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்காக இத்தகைய புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த அமைப்பில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின்சூக்கா ஆகியோரையும் உள்ளடக்க இருப்பதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவை சேனாதிராஜா தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த விடயம் தொடர்பாக தற்போதைய நிலைமையில் எந்தவிளக்கத்தையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.