இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமது உறவுகளை நினைவுகூர்ந்த முல்லைத்தீவு மக்கள் !

IMG 5433
IMG 5433

2020ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் இராணுவம் ,காவல்துறை ,புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.

IMG 5449 3
IMG 5449 3

பொது இடங்களில் மாவீரர்நாள் நினைவேந்தல் செய்யவோ ஒன்று கூடவோ முல்லைத்தீவு நீதிமன்றம் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 46 பேருக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் தடை விதிக்க பட்டுள்ள நிலையில் மிகவும் அச்சமான சூழலில் பொதுமக்களால் தமது பிள்ளைகளான மாவீரர்களுக்கு தத்தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.

IMG 1999

மாலை 6.07 மணிக்கு  உயிரிழந்த மாவீரர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் வீடுகளில் இடம்பெற்றுள்ளது.

DSC01445
DSC01445

ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் ரோந்துகள் , விசேட மோட்டார் சைக்கிள் இராணுவ அணியினரின் ரோந்துகள் காவல்துறை  மற்றும் கடற்படை , இராணுவ புலனாய்வு தேசிய புலனாய்வு பிரிவினர்கள் வீதிகள் தோறும் குவிக்கப்பட்டு வீதியால் சென்று வருபவர்களின் விபரங்கள் திரட்டபட்டு மோசமான பாதுகாப்பு கெடுபிடிகள் காணப்பட்ட போதிலும் மக்கள் தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

IMG 5381
IMG 5381

இந்த நிலையில் வீடுகளில் அஞ்சலி செலுத்தியோருக்கும் இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது . வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் ஏன் விளக்கேற்றுகிண்றீர்கள் என கேட்டு விபரங்களையும் பதிந்து சென்றுள்ளனர்.

IMG 5429
IMG 5429

முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் கடைகள் அனைத்தும் திறக்காத வர்த்தகர்கள் கடைகளை மூடி வீடுகளில் இருந்து மாவீரர்களை அஞ்சலிக்கு ஆயத்தமான நிலையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் வர்த்தக நிலைய உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டும் நேரடியாக சென்றும் மிரட்டி உடனடியாக கடைகளை திறக்குமாறு வற்புறுத்தி அச்சுறுத்தல் விடுத்ததனர்  இருந்தும்  வர்த்தக நிலையங்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது மூடியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

IMG 5439
IMG 5439

இதேவேளை செய்தி சேகரிப்பில் இருந்த ஊடகவியலாளர்களையும்  அச்சுறுத்தி இராணுவம் அவர்களின் விபரங்களை திரட்டியுள்ளது  

மாவீரர்நாள் நிகழ்வுகள் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் முல்லைத்தீவு நகரம் மற்றும் வன்னிவிளாங்குளம்  போன்ற பகுதிகளில்  செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்  சுற்றிவளைத்து விபரங்களை பதிந்ததோடு புகைப்படங்களை எடுத்து மிரட்டல்களையும் விடுத்துள்ளனர்.

IMG 5448
IMG 5448

இதனால் ஊடகவியலாளர்களால் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலை இராணுவத்தினரால் ஏற்படுத்த பட்டது.

துயிலும் இல்லங்களை சூழ நூறுக்கணக்காண இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆலங்குளம், வன்னிவிளாங்குளம் , முள்ளியவளை ,அளம்பில் ,முள்ளிவாய்க்கால் , தேராவில் , இரட்டை  வாய்க்கால் , இரணைப்பாலை , தேவிபுரம் , கோடாலிக்கல்லு , ஆகிய துயிலும் இல்லங்களை சூழ நூறுக்கணக்கான இராணுவம் , பொலிஸார் , புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தபட்டிருந்தது. இதனால் அந்த இடத்தை எவராலும் நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்க பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தத்த்து.

இவை அனைத்துக்கும் மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு நகர் பகுதியில் வசித்து வருகின்ற தமிழரசு கட்சியின்  இளைஞர் அணி செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன்  அவர்கள் தன்னுடைய வீட்டில் தன்னுடைய சகோதரனுக்கு சுடர் ஏற்றினார்  .

அவருடைய வீட்டில் சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்க விட்டு தன்னுடைய உயிரிழந்த உறவின்  புகைப்படத்தை வைத்து அதற்கு முன்பாக சுடர் ஏற்றுவதற்கு தயாராகிய  நிலையில் குறித்த வீட்டை சூழ இராணுவம் காவல்துறையினர் புலனாய்வாளர்கள் சுற்றி வளைத்தனர் இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது இந்நிலையிலும் அவர் தனது உறவுக்கு சுடரேற்றினார்