உடல்களை புதைப்பதனால் கொரோனா பரவும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை : ஹக்கீம்!

83b86709ae1689396b7d0403d8b80733 XL
83b86709ae1689396b7d0403d8b80733 XL

உடல்களை புதைப்பதனால் கொரோனா பரவும் என்பதற்கான எந்த விதமான விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவருமான ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

இதுவரை கொவிட் 19 இனால் உயிரிழந்த 20 முஸ்லிங்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு சமூகம் அடையாள ரீதியான எதிர்ப்பினை முன்னெடுத்துள்ளது. அநீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாட்டுக்கு எதிராக இந்த அடையாள எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே தயவு கூர்ந்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உடல்களை புதைப்பதனால் கொரோனா பரவும் என்பதற்கான எந்த விதமான விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் இல்லை.

அத்துடன் வைரஸ் தொடர்பான நிபுணர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பல நிபுணர்களின் கருத்துக்கள் இதற்கு சான்றாக அமைகின்றன.

ஆகவே அரசாங்கத்தின் தீர்மானம் கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.எவ்வித தாமதங்களும் இன்றி அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினரும்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவருமான ரவுப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.