மக்கள் அவதானமாகவும்,பாதுகாப்பாகவும் இருந்து பண்டிகைகளை கொண்டாட வேண்டும்-க .வி விக்னேஸ்வரன்!

cv
cv

மக்கள் அவதானமாகவும்,பாதுகாப்பாகவும்இருந்து பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க .வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு

நத்தார் வருடந் தோறும் ஒரு முறையே வரும். இறை யேசு பாலகன் பிறந்தஇந்தக் காலத்தில் உலகம் பூராகவும் அவர் பிறப்பைக் கொண்டாடுவார்கள்.

இவ்வருடம் இக் கொண்டாட்டங்கள் கவனத்துடனும் அவதானத்துடனும் நடைபெறவேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்நத்தார் பண்டிகையையும், வருடப்பிறப்பையும் அதன் பின்னர் வரவிருக்கும் தைப் பொங்கலையும் எம் மக்கள்கட்டுப்பாடுகளுக்கு அமையக் கொண்டாடுவார்களாகஇறை வழிபாடு மனதால்நடைபெற வேண்டும்.


இவ் வருடம் கூடிக் கும்மாளம் அடிப்பதைகட்டுப்படுத்துவோமாக! பொருட்கள் வாங்கும் போதும் காய், கறி உணவு வகைகள்வாங்கும் போதும் கட்டுப்பாட்டுடன் இவ்வருடம் நடந்து கொள்வோமாக!
இறையருளால் எம் மக்கள் யாவரும் நலமுடன் வாழப் பிரார்த்திக்கின்றேன்

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
நாடாளுமன்றஉறுப்பினர்
யாழ் மாவட்டம்,
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி,
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது