ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் – அமைச்சர் நாமல் வலியுறுத்து

namal rajapaksa 7f656e45 b453 468e 99aa 185e81a8da5 resize 750
namal rajapaksa 7f656e45 b453 468e 99aa 185e81a8da5 resize 750

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தனக்குக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தனக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின், நேற்றுமுன்தினம் காவற்துறை மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியினுள் ஹரின் பெர்னாண்டோவுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விடயங்களில் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.