முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு கண்டனம்

ErONSUSXYAAxEyo 2 300x225 1
ErONSUSXYAAxEyo 2 300x225 1

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.


இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தகுற்றங்களிற்கு இலக்கான ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவு கூறுவதற்காகவே இந்த தூபி உருவாக்கப்பட்டது என பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சிநாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

நினைவுகூருவதற்கான உரிமை என்பது நல்லிணக்க நீதி செயற்பாடுகளின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தூபியை அழிப்பது நல்லிணக்க முயற்சிகளை நேரடியாக அலட்சியம் செய்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.


இது தமிழர்களின் வரலாற்றையும் அடையாளத்தையும் அழிக்கும் நடவடிக்கை பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைக்கு பாதுகாப்பாக நாங்கள் தமிழர்களிற்கு ஆதரவாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.


பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் எங்களின் கரிசனைகளைஇலங்கையிடம் எழுப்ப வேண்டும் தனது கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டும் என அவருக்கு எழுதியுள்ளதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது