உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை!

G.L.Piris 720x450 1
G.L.Piris 720x450 1

இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிலவிய பல்வேறு நெருக்கடிக்கு இடையில் உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக நடாத்த முடிந்ததாக இன்று முற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் சாதாரண தர பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.