எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 01 20T182823.969
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 01 20T182823.969

உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக தினந்தோறும் சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும இது தொடர்பாக தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபை நாளாந்தம் சுமார் 450 டொன் கழிவுப்பொருட்களை சேகரிக்கின்றது.

கரந்தியான குப்பை மேட்டிற்கு எடுத்துவரப்படும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 700 டொன் கழிவுப்பொருட்களை பயன்டுத்தி 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதனை தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்த அவர் மொரட்டுவ, தெகிவளை-கல்கிஸ்சை கோட்டே, ஹோமாகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் குப்பைகளையும் பயன்படுதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.