யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள்!

IMG 20210120 WA0012
IMG 20210120 WA0012

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்டுத்திருந்தனர்.

பின்னர் சில மாணவர்களால் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் கடந்த 11 ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களிப்புடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய இன்றையதினம் தூபி அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.