கிழக்கு முனையத்தை யார் எதிர்த்தாலும் இந்தியாவுக்கு அரசு வழங்கியே தீரும் – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா!

1513664357 nimal lanza 1
1513664357 nimal lanza 1

“யார் எதிர்ப்பு வெளியிட்டாலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.” என கிராமிய அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

வத்தளை கெரவலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலீடுகள் அவசியமானவை.

இதனால் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய எந்த நாடு முன்வந்தாலும் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

நாட்டுக்கு முதலீடுகள் கிடைக்கும்போது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் நாங்கள் கிழக்கு முனையத்தில் முதலீடு செய்ய இந்தியாவின் நிறுவனத்திற்கு வாய்ப்பளிப்போம்.

இலங்கைக்கு அருகிலுள்ள நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது” – என்றார்.