மகாவம்சத்தின்படி இந்த நாடு 75 வீதத்துக்கு மேல் தமிழர்களுக்கு உரித்தான பகுதி – யோகேஸ்வரன்!

DSC 0104
DSC 0104

மகாவம்சத்தின்படி இந்த நாடு 75 வீதத்துக்கு மேல் தமிழர்களுக்கு உரித்தான பகுதி தமிழர்களின் தொல்பொருள் அடங்கிய, அனுராதபுரம்.பொலநறுவையை தமிழன் ஆண்டிருக்கின்றான் ஆகவே இந்த பகுதிகள் தமிழர்களுக்குரியது எனவே வடகிழக்கில் இந்து ஆலையங்கள் உடைப்பது தொல்பொருள் என பிரகடனப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடருமாக இருந்தால் தொடர்ந்து சாத்வீக ரீதியில் பல போராட்டங்களை செய்ய தயாரக இருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு கிழக்கு ஊடக ஒன்றியத்தில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பி அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கிழக்குமாகாணத்திற்கு ஒரு தொல்பொருள் செயலணியை கொண்டுவந்துள்ளார். அதில் நூறு வீதம் சிங்களவர்களும், பௌத்த பிக்குகளும் இராணுவவும் தான். இதற்கு பொறுப்பாக நியமித்துள்ளவரும் ஒரு இராணவ உயர் அதிகாரி.

தற்போது வடக்கிலும் அந்த தொல்பொருள் செயற்பாடுகள் நடைபெறுகின்றது. சந்திரிக்கா பண்டார நாயக்கா காலத்தில் தொல்பொருள் என்ற சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்மையாருடன் பேசி அதை நிறுத்தியிருந்தார். அதன் பிற்பாடு மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மீண்டும் தொல்பொருள் செயற்பாடுகள் ஆரம்பிக்கபட்டது.

கடந்த 2006 திருகோணமலை மாவட்டத்திலே இலங்கைத் துறைமுகத்திலே குஞ்சிதபாத மலை என்ற இடத்தில் இருந்த பாலமுருகன் ஆலையத்தை இடித்துவிட்டு தொல்பொருள் என்று அந்த இடத்தில் பௌத்த விகாரையை கட்டினர்.

அதேபோன்று அதில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கல்லடி என்ற கிராமத்தில் நீலி அம்மன் ஆலையத்தை இடித்துவிட்டு அங்கும் பௌத்த விகாரை கட்டினர். தொல்பொருள் என்று கூறிக்கொண்டு இந்து ஆலையங்களை இடிப்பதையும் அதில் பௌத்த விகாரை அமைப்பதும் இந்த பேரினவாத அரசாங்கம் தொடர்சியாக செய்து வருகின்றது. மகிந்த ராஜபஷகாலத்தில் கூடுதலாக இருந்தது.

மைத்திரிபால சிறிசேன காலத்தில் அதனை நாங்கள் தடுத்திருந்தோம் இப்போது கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததும் மிக தீவிரமாக இருக்கின்றது பௌத்த பிக்குகள் மிக நீண்ட காலமாக அங்கு வசித்ததாகவும் யுத்தத்தால், இடம்பெயர்ந்து வந்ததாகவும் தெரிவித்து சிலபகுதிகளை கூறிக் கொண்டு அதனை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

வெள்ளைக்காரன் ஆட்சிக்கு முன் சில இடங்கள் பறிக்கப்பட்டதாக கூறுகின்றனர் நான் கேட்கின்றேன் 1948 சுதந்திம் அடைந்த பின் இந்த நாட்டை பெரும்பான்மை சமூகம் தான் ஆளுகின்றனர். அப்போது வந்து உங்கள் இடங்களை பிடிக்கவில்லை ஆனால் தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கப்பட்டு அகிம்சை ரீதியாக போராடிய தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடிய ஆயுதமும் மௌனித்தது என்பதும் தொல்பொருள் என்று தமிழ் பகுதிகளை சுவீகரிக்க திட்டமிட்டு செயற்படுகின்றீர்கள்.

தொல்பொருள் என்று மையப்படுத்தினால் அது பொதுவாக இருக்கவேண்டும. அங்கு ஏன் பௌத்த விகாரை அமைக்க வேண்டும் ? இந்த நாட்டின் வரலாறு மற்றும் மகாவம்சத்தின் கருத்தின்படி இந்த நாடு 75 வீதத்துக்கு மேல் தமிழர்களுக்கு உரித்தான பகுதி தமிழர்களின் தொல்பொருள் அடங்கியபகுதி அனுராதபுரம், பொலநறுவையில். இன்றும் பல ஆலையங்கள் இருக்கின்றது ஆட்சி செய்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றது.

ஏன் மகாவம்சம் கூட சொல்லுகின்றது அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மன்னனை துட்டகைமுனு மன்னன் அவனைக் கொன்றுவிட்டு அந்த இடத்தை கைப்பற்றியதாகவும் அவரை கொல்ல செல்லும் போது 32 தமிழ் சிற்றரசர்களை கூட்டிச் சென்றதாக சொல்லுகின்றது எனவே 32 இடம் அந்த காலத்தில் தமிழரின் கையிலே இருந்துள்ளது.

இலங்கையின் முதலாவது மன்னன் இராவணன் அவனுக்குபின் குபேரன் ஆண்டான் இலங்கையின் கடைசிமன்னன் இராஜசிங்கம் என்கின்ற கண்ணுச்சாமி அவனும் ஒரு தமிழன் தான் எனவே நாங்கள் அனுராதபுரத்தை, பொலநறுவையை கேட்டோமா அங்கொல்லாம் தொல்பொருள் என்ற எங்கள் அடையாளங்கள் இருக்கின்றது அங்கொல்லாம் செய்வதை நாங்கள் பாத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏன் தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்துமக்களின் வாழ்விடங்களை தொல்பொருள் என்றவகையில் பறித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்து ஆலையங்களை கப்பற்றுவதையோ அந்த பகுதி தொல்பொருள் என்று இந்து மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதையோ தமிழர்வாழ்விடங்களை சுவீகரிப்பதோ ஒரு போதும் அனுமதிக்கமுடியாது.

தமிழர்களின் குடிசனதொகையை குறைப்பதற்காக பயிர்செய்கை, பௌத்தவிகாரை, இராணு வீடமைப்பு, மக்கள்குடியேற்றம், மகாவலி சுவீகரிப்பு என்ற போர்வையில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரம் இராணுவத்தினருக்கு வீட்டுத்திட்டம் கொண்டுவரபடவுள்ளது இதனை அனுமதிக்க முடியாது.

இந்த கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் மிகமோசமான கீழ்தரமான செயலை செய்கின்றது இதனை ஏற்கமுடியாது இதில் பாரிய மனித உரிமை மீறல் இதில் சர்வதேசம் மிகவும் கவனம் செலுத்தவேண்டும் அதேவேளை இந்த செய்தியை ஜ.நாட்டு சபை, யுனஸ்கோவுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.