வவுனியாவில் உழவர் சந்தை உருவாக்கம்!

DSC03722
DSC03722

விவசாயிகளின் நன்மைகருதி வவுனியாவில் உழவர் சந்தை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (12) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களிற்கு போதுமான நியாயமான விலை கிடைக்காமையினாலும், நுகர்வோர்களிற்கும் சரியான விலையில் பொருட்கள் கிடைக்காமையினையும் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிற்கு சேவைவழங்கும் நோக்குடன் உழவர் சந்தை என்ற அமைப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறோம். அது வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் செயற்படும். குறித்த சந்தை விவசாயிகளால் நடாத்தப்படும் ஒன்றாக இருக்கும்.

பொருட்களின் நாளாந்த நிர்ணய விலை அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். நுகர்வோர்களும் நியாயமான முறையில் அதனை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். அத்துடன் அந்த அமைப்பினூடாக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும் நாம் ஏற்பாடுகளை செய்துள்ளோம். சிறியளவிலேயே முதற்கட்டமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை விஸ்தரிப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

வியாபாரம் ஒரு சிலருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வவுனியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையை 35 பேர் தீர்மானிக்க முடியாது. இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்கிறோம். அந்தவகையிலேயே அனைவரையும் திருத்திப்படுத்தும் வகையில் சந்தையை ஏற்ப்படுத்தியுள்ளோம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிற்கும் அந்த வாய்ப்பை ஏற்ப்படுத்தும் வகையில் கமநலசேவை நிலையங்களூடாக விவசாயிகளை இணைத்து அதனை முன்னெடுக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். என்றனர்.