மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுவிக்கப்பட்டார்!

201808252033509312 57 prisoners released from trichy jail SECVPF
201808252033509312 57 prisoners released from trichy jail SECVPF

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார்.

இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை காவல் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கதறி அழுதார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.