நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்!

image 4
image 4

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேரில், 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹாவில் 76 பேரும், இரத்தினபுரியில் 59 பேரும், கண்டியில் 38 பேரும், குருநாகலில் 28 பேரும், நுவரெலியாவில் 25 பேரும், களுத்துறையில் 22 பேரும், மாத்தளையில் 22 பேரும் மற்றும் மாத்தறையில் 18 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 15 பேர், பதுளை மற்றும் அம்பாறையில் 12 பேர், மொனராகலையிலிருந்து 09 பேர், காலியில் இருந்து 07 பேர், யாழ்ப்பாணத்திலிருந்து 05 பேர், கேகாலையிலிருந்து 05 பேர், முல்லைத்தீவிலிருந்து 02 பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளராக நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.

மேலும், அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா 02 பேரும், புத்தளம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் நேற்று பதிவாகியுள்ளனர்.