சுமார் 30 வருடங்களின் பின்னர் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்ற யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால்!

IMG 20210228 WA0032
IMG 20210228 WA0032

யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்றது.

சுமார் கடந்த ஆயிரத்து 990 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் துப்புரவு செய்யப்படாத குறித்த பிரதான வாய்க்கால் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் நெறிப்படுத்தலில் யாழ் மாநகர சபையின் சுகாதார பணியாளர்களால் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ் நகரின் ஸ்டான்லி வீதியிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வரை செல்லும் இரண்டு கிலோ மீட்டர் நீளமுடைய குறித்த பிரதான வாய்க்கால் யாழ் நகரின் மத்தியின் ஊடாக கடைகள் வீதியின் கீழாக செல்கின்றது.

இந்த துப்பரவு பணி மிக கடினமானதாக இருப்பதனால் மாநகர சபையின் நோயாளர் காவு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பித்திருக்கின்ற இந்த துப்பரவு பணி இன்னு சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.