கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது

big 165616 Coronavirus 1 3
big 165616 Coronavirus 1 3

நாட்டில் மேலும் 264 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 238 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 87ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது.

06 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 161 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயி ரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 353 பேர் வைத்திய கண் காணிப் பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது.