ஆயிரம் ரூபா விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியும் – ஜீவன்

jeevan thondaman
jeevan thondaman

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று (2) கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதனை தெரிவித்தார்.

கடந்த ஆட்சிகாலத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் கூட்டுவதாக கூறி 5 வருடகள் மாத்திரமே கடத்தப்பட்டன. இதன்போது அதற்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை.

ஆனால் தற்போது தொழிலாளர்களின் நலனை கருத்திற்கொண்டு, கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். இந்நிலையில் ஒரு சிலர், தொழிலாளர்களை குழப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

எந்ததொரு விடயத்திணை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.