இராணுவத்தினரின் தேவைக்காக 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து போராட்டம்!

201912201923451525 coimbatore Struggle for Opposition to Citizenship Amendment SECVPF
201912201923451525 coimbatore Struggle for Opposition to Citizenship Amendment SECVPF

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இன்றையதினம் போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ப.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், உள்ளூராாட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.