போராடிப் பெறுவதே எங்கள் வரலாறு! – தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனோ கருத்து

Mano 01
Mano 01

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

மத்திய மாகாணத்தில் ஆரம்பித்து, இப்போது ஊவா மாகாணம் வரை, மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு என்ற இயந்திரம் ஒழிக்கப்பட்டு, தமிழ்ப் பிரிவு ஆகிவிட்டது.

6 தமிழர் பெரும்பான்மை பிரதேச சபைகளை நுவரெலியாவில் போராடிப் பெற்றதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வரலாறு. இருப்பதையும் இழப்பது இப்போதைய வரலாறு.

தனியான தமிழ்க் கல்வி அமைச்சு என்றால் மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்தில், எங்கள் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் – என்றுள்ளது