மக்கள் வீழ்ச்சியடையும் வகையில் அரசாங்கம் செயற்படாது – துமிந்த திசாநாயக்க

625.500.560.350.160.300.053.800.900.160.90 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 8

ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போனாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக அனைவரினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் கூறினார்.

புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும்போது வேலையற்றோர் வேலை தொடர்பாகவும் பலர் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்றவற்றினை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே பொதுமக்கள் வீழ்ச்சியடையும் வகையில் இந்த அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்றும் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.