சதோச பொதியை அவதூறாகப் பேசியவர்களிடம் நஷ்டஈடு கோரப்படும் – பந்துல

625.500.560.350.160.300.053.800.900.160.90 10
625.500.560.350.160.300.053.800.900.160.90 10

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சதோச நிவாரணப் பொதி குறித்து அவதூறாகப் பேசியவர்களிடம் 500 மில்லியன்  ரூபா நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள   ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1,000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி  அனைத்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது

நிவாரண பொதியை விற்பனை செய்யும் போது ஒரு சிலர் நிவாரணப்பொதி தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அது தொடர்பில் கொம்பனித்தெரு காவல்துறையில் சதோசவின் தவிசாளர், தேயிலை விநியோகஸ்தர்கள், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் , சமூக வியாபார இயக்கத்தினர் ஆகியோர் இணைந்து அவர்களது வர்த்த நடவடிக்கைக்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்கள். நிவாரணப் பொதி தொடர்பில் தவறான  கருத்துகளை வெளியிட்டவர்களை கைதுசெய்து ஊடகங்கள் முன்பாக அவர்களது கருத்துகளை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாம் இதுவரை நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த தரகு வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளோம். மிளகு 100 கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஆனால் இந்த அரசாங்கம் மிளகு செய்கையை ஊக்கபடுத்தி ஒரு பை மிளகை 170 ரூபாய்க்கு வழங்கியது என்றார். அதேபோல் 1 கிலோகிராம் கஜுவை 1,100 ரூபாயாக குறைத்துள்ளது. எனவே இதுவரை இடம்பெற்று வந்த தரகு கொள்ளை வர்த்தகத்தை நிறுத்துவதற்காக அரசாங்கம் தலையிட்டுள்ளது என்றார்.