தற்போதைய கொரோனா நிலைக்கு அரசாங்கமே காரணம் – விஜித ஹேரத்

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 9 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 9 1

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

பி.சி.ஆர் சோதனைகளை அரசாங்கம் குறைத்துள்ளது என்றும் இதன் விளைவாக அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்னிக்கை வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய பி.சி.ஆர். பரி சோதனை மூலம், கிராமப்புறங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் கூறினார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளும் அதிகரித்து வருவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளின் எண்னிக்கை குறைந்துவிட்டன என அரசாங்கம் கூறிவருவதனாலேயே பொதுமக்களும் கொரோனா குறித்த அச்சத்தைத் தணித்து, நிதானமாக பயணிக்கத் தொடங்கினர் என்றும் விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.

மேலும் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.