இரசாயன பசளை இல்லாத உலகின் முதல் நாடாக இலங்கை மாறும்-கோட்டாபய

Sagara 4296 1068x712 1 1 1
Sagara 4296 1068x712 1 1 1

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல், இரசாயன பசளைகளைப் பயன்படுத்துவதை, முழுமையாக இல்லாதொழித்த உலகின் முதல் நாடாக, இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் என்பனவற்றை பயன்படுத்தல் மற்றும் இறக்குமதி என்பனவற்றின் மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.