ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்வோம் – அமைச்சர் டலஸ்!

dalas 640x400 1
dalas 640x400 1

“இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.” என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் ஒட்சிசன் தயாரிக்கும் நிறுவனங்களின் திறன் மற்றும் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசியமான அளவு ஒட்சிசன் இதுவரையில் கையிருப்பில் உள்ளது.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தவிர்ந்த, ஏனைய இடங்களிலும் ஒட்சிசன் வழங்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது” – என்றார்.