அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார்! – ஐக்கிய மக்கள் சக்தி

அத்தநாயக்க
அத்தநாயக்க

நாட்டில் நடந்து வரும் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் நாம் ஆதரிக்கப்போவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் இதுவரை நாம் ஆதரவைக் கோரவில்லை, ஆனால் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தை ஆதரிக்க நாம் தயார்.தற்போதைய தொற்றுநோயிலிருந்து அரசியல் நன்மைகளைப் பெற நாம் முயற்சிக்கப்போவதில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக நாம் எந்த நேரத்திலும் வீதிகளில் இறங்கலாம், ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அதை செய்யப்போவதில்லை.

எந்த விமர்சனத்தை முன்வைக்கிறோமோ அது விரோதங்களை நோக்கமாகக் கொண்டதாக இருக்காது, ஆனால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

தற்போதைய மூன்றாவது அலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக சமீபத்திய பண்டிகை காலங்களில், மக்கள் பின்பற்ற வேண்டிய சரியான சுகாதார வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. மேலும், வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான முடிவும் ஒரு தவறு என்றும் அத்தநாயக்க குறிப்பிட்டார்.