காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

08e261db 4e19 4706 b552 1488fcbfc707
08e261db 4e19 4706 b552 1488fcbfc707

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்ததுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

a018261a ae53 4900 ad52 6a25007063d7

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டு, சுமார் 400 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அமைக்கப்பட்ட 50 அடி நீளமான இறங்கு துறையே தற்போதும் காணப்படுவதாகவும், தற்போது சுமார் 800 படகுகள் சேவையில் ஈடுபட்டுள்ள நிலையில்,  இறங்கு துறையை விஸ்தரித்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் பாரிய மீனபிடிக் கலன்களை பயன்படுத்தி தொழில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேச கடற்றொழிலாளர்கள்,  இறங்குதுறை விஸ்தரிக்கப்படுகின்ற போது பாரிய கலன்கள் பயன்படுத்தக்கூடியவாறு அமைத்து தருமாறும், கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது