பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் இல்லை – திஸ்ஸ விதாரண

திஸ்ஸ விதாரண
திஸ்ஸ விதாரண

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுலில் உள்ள பயணத்தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்காடி விற்பனை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் அதனை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதி பெரும்பாலான மக்களிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே சிறந்த திட்டங்களை செயற்படுத்துமாறு தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.