பயணத்தடை தொடர்பில் ஆழமாக அவதானித்த பின்னரே தீர்மானம் – கெஹெலிய

ரம்புக்வெல
ரம்புக்வெல

போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் மிக ஆழமாக அவதானித்த பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதே வேளை, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.